தங்கம்

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன.?

வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது.

சென்னை,

தங்கம் விலையில் ஏற்றம்-இறக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 820-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 560-க்கும் விற்கப்பட்டது. நேற்று முன் தினம் காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.230-ம், சவரனுக்கு ரூ.1,840-ம் உயர்ந்தது. பின்னர் மாலை கூடுதலாக கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் அதிகரித்தது.

நேற்று தங்கம் விலை அதிகரித்து, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,150-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தங்கம் விலை

இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலையில் இன்று எவ்வித மாற்றமும் இல்லை. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.14,150-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி ஒரு கிராம் ரூ.275க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்றும் விலை மாற்றமின்றி அதே விலைக்கும், ஒரு கிலோ ரூ.2,75,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

08.05.2026 ஒரு சவரன் ரூ.1,13,200 (இன்று)

07.05.2026 ஒரு சவரன் ரூ.1,13,200 (நேற்று)

06.05.2026 ஒரு சவரன் ரூ.1,12,800

05.05.2026 ஒரு சவரன் ரூ.10,560

04.05.2026 ஒரு சவரன் ரூ.1,12,000

03.05.2026 ஒரு சவரன் ரூ.1,12,000