சென்னை,
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏறுமுகம் கண்டு வருகிறது.
கடந்த 14-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், சவரன் ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனையானது. இது படிப்படியாக அதிகரித்து நேற்று முன் தினம் மேலும் ரூ.250 அதிகரித்து கிராம் ரூ.14 ஆயிரத்து 850-க்கும், ரூ.2 ஆயிரம் அதிகரித்து சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 800-க்கும் விற்கப்பட்டது.
நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,950-க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,19,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், விடுமுறை தினமான இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரு கிராம் ரூ.14,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லாமல், நேற்றைய விலையிலேயே அதாவது ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.