வணிகம்

தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம் என்ன?

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஒரேநாளில் இரு முறை மாற்றம் கண்டு வருகிறது.

அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று இரு முறை உயர்ந்தது. நேற்று காலை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 150 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,400க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் சவரனுக்கு ரூ. 1200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,07,200க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று மாலை தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி, நேற்று மாலை தங்கம் விலை கிராமிற்கு ரூ. 150 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,550க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ. 1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,08,400க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை கிராமிற்கு ரூ. 5 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் அதிகரித்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,55,000க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 150 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 13,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கம் சவரனுக்கு ரூ. 1200 உயர்ந்த ஒரு சவரன் ரூ. 1,09,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமிற்கு ரூ. 5 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 260க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் அதிகரித்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,60,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.