ஐ.டி.பி.ஐ. வங்கியில் மத்திய அரசு மற்றும் எல்.ஐ.சி.க்கு சொந்தமான 60.72 சதவீத பங்குகளை கனடாவைச் சேர்ந்த பேர்பாக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.53 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்ய மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நி லையில், முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மை துறை செயலாளர் அரு னிஷ் சாவ்லா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பங்குகளை வாங்கிய நிறுவனம், தனது தொழில்நுட்ப ஆவணங்களை ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்கும். அந்நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தவுடன் பங்கு கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தாகும். இதன்மூலம், இந்த பரிவர்த்தனை நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் முடிவடையும். சிறுபான்மை மற்றும் சில்லறை பங்குதாரர்களின் நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படும். அதுபோல், ஊழியர்க ளின் பணி நிபந்தனைகள் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.