சென்னை,
நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
* ஆகஸ்ட் 2, ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை.
* 4ம் தேதி கெர்பூஜா என்ற பண்டிகையின் காரணமாக திரிபுராவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
* 8ம் தேதி சிக்கிமில் கொண்டாடப்படும்"டெண்டோங்லோ ரம்பாட்" எனும் பண்டிகைக்காக அங்குள்ள வங்கிகள் அன்று மூடப்பட்டிருக்கும்.
* 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை.
* 13ம் தேதி தேச பக்தர்கள் தினத்தை முன்னிட்டு மணிப்பூரில் உள்ள வங்கிகளுக்கு அன்று விடுமுறை.
* ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் வங்கிகள். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.
* 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வாராந்திர விடுமுறை.
* 19ம் தேதி மாணிக்யபகதூர் மகாராஜா பீர்பிக்ரம் கிஷோர் பிறந்தநாளுக்காக திரிபுரா மாநிலத்தில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை.
* ஆகஸ்ட் 22ம் தேதி மாதத்தில் வரும் 4வது சனிக்கிழமை. 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை.
* 25ம் தேதி மிலாடி நபி. முதல் ஓணம், நபியின் பிறந்தநாள் போன்றவற்றுக்காக கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை.
* 26ம் தேதி கேரளாவில் திருவோணம், ஐத்இமி லாத், பரவாபத் போன்ற பண்டிகைகளுக்காக அங்குள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
* ஒரு சில மாநிலங்களில் மிலாடி நபி ஆகஸ்ட் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாடு, மராட்டியம், கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்தரகாண்ட், தெலுங்கானா, மணிப்பூர், ஜம்மு-ஸ்ரீநகர், ஜார்கண்ட், சத்தீஸ்கார், பீகார், டெல்லி, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை.
* 28ம் தேதி நாராயணகுருஜெயந்தி, அய்யன்காளி ஜெயந்தி, ரட்ஷா பந்தன், பாங்லாப்சோல், ஈத்இமிலாத் உல்நபி போன்ற பண்டிகளுக்காக குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கேரளா, இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
* ஆகஸ்ட் 30, ஞாயிற்றுக்கிழமைக்காக வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை.
எனவே விடுமுறை தினங்களிலும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அந்தந்த வங்கி யின் நெட் பேங்கிங் சேவைகளை பயன்படுத்தலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.