வணிகம்

உலக பொருளாதார தர வரிசையில் இந்தியாவுக்கு 6-வது இடம்

கடந்த ஆண்டு இதே பட்டியலில் 5-வது இடத்தில் இருந்த நிலையில், நடப்பாண்டில் ஒரு இடம் பின்னுக்கு சென்றுள்ளது.

ஒரு நாட்டின் நாணய மதிப்பு, உலகச் சந்தையில் அதன் வர்த்தக வலிமை மற்றும் மக்களின் வாங்கும் திறன் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சிக்கலான கணக்கீட்டை பயன்படுத்தி உலக பொருளாதார தரவரிசையை சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான உலக பொருளாதார தரவரிசைப் பட்டியலை சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 32.38 டிரில்லியன் டாலருடன் அமெரிக்கா உள்ளது.அதற்கு அடுத்த இடத்தில் 20.85 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் சீனா உள்ளது. 3-வது இடத்தில் ஜெர்மனி (5.45 டிரில்லியன் டாலர்), 4-வது இடத்தில் ஜப்பான் (4.38 டிரில்லியன் டாலர்), 5-வது இடத்தில் இங்கிலாந்து (4.26 டிரில்லியன் டாலர்) உள்ளன.

இந்தியா 6-வது இடத்தில் (4.15 டிரில்லியன் டாலர்) இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே பட்டியலில் 5-வது இடத்தில் இருந்த நிலையில், நடப்பாண்டில் ஒரு இடம் பின்னுக்கு சென்றுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரான்ஸ் (3.6 டிரில்லியன் டாலர்) உள்ளது.

SCROLL FOR NEXT