வணிகம்

அக்டோபரில் 14.5 கோடி டன் சரக்குகளை ஏற்றி இந்திய ரெயில்வே சாதனை பதிவு

நிலக்கரி சரக்கு போக்குவரத்தும் அதிகரித்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 19.5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

புதுடெல்லி

இந்திய ரெயில்வே கடந்த அக்டோபரில் 14.5 கோடி டன் சரக்குகளை ஏற்றி சாதனை படைத்துள்ளது.

இந்திய ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்திய ரெயில்வே கடந்த அக்டோபர் மாதம் ஏறக்குறைய 14.5 கோடி டன் சரக்குகளை ஏற்றி சிறந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13.4 கோடி டன் அளவுக்கு சரக்குகளை கையாண்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 8.32 சதவீதம் கூடுதலாக வளர்ச்சி பதிவாகியுள்ளது.

நிலக்கரி சரக்கு

உணவு தானியங்கள் 26.3 சதவீதம், உள்நாட்டு நிலக்கரி 16 சதவீதம், இதர பொருட்கள் 11 சதவீதம், உள்நாட்டு கன்டெய்னர்கள் 6.3 சதவீதம், இரும்புத்தாது 5 சதவீதம் மற்றும் கனிம எண்ணெய் 1.9 சதவீதம் கூடுதலாக கையாளப்பட்டு உள்ளன. நிலக்கரி சரக்கு போக்குவரத்தும் அதிகரித்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 19.5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

இதேபோன்று, 2026-27 நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் இந்திய ரெயில்வே 97.87 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இதில், அக்டோபர் மாதத்தில் அதிக அளவு சரக்குகள் கையாளப்பட்டு சாதனை வளர்ச்சி பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டில் இது 93.51 கோடி டன்களாக இருந்தது. இதனால், 4.67 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT