வணிகம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மும்பை,

வாரத்தின் முதல் நாளான இன்று (27.07.2026 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. ஈரான் - அமெரிக்கா மோதல் தணிந்துள்ள நிலையில் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது.

பங்குச்சந்தை உயர்வு

அதன்படி, 228 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 23 ஆயிரத்து 995 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 393 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 87 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

216 புள்ளிகள் அதிகரித்த பின் நிப்டி 26 ஆயிரத்து 126 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 776 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 835 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

136 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 572 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 505 புள்ளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் 64 ஆயிரத்து 802 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.