மும்பை
இந்திய பங்கு சந்தைகள் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, மெதுவாக மீட்சியடைந்து லாப நோக்கில் முன்னேற்றம் கண்டது. இந்த நிலையில் மாலையில், பங்கு வர்த்தகம் நிறைவடையும்போது, லாபத்துடன் முடிந்தன.
இதன்படி, மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 753.03 புள்ளிகள் உயர்ந்து 79,273.33 புள்ளிகளாக நிலை கொண்டிருந்தது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 211.75 புள்ளிகள் உயர்ந்து 24,576.60 புள்ளிகளாக இருந்தது.
உலகளாவிய சூழலை சந்தை முதலீட்டாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கையாக கவனித்து வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இன்று 2-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மேற்காசிய பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை தணிவதற்கான சாத்தியம் உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனை முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர் என வர்த்தக நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த பேச்சுவார்த்தைகள், எதிர்கால சந்தை நிலவரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.