வணிகம்

நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி சரிவு

கடந்த 2025-ம் ஆண்டு ஏற்றுமதி மதிப்பை காட்டிலும் 5.79 சதவீதம் குறைவாகும்.

புதுடெல்லி,

புவிசார் அரசியலில் ஏற்பட்டுள்ள நிலையில்லாத தன்மை, அமெரிக்கரின் வரிவிதிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு தங்க ஆபரணங்கள், ரத்தினக்கற்கள் ஏற்றுமதி சரிந்ததாக ஆபரணங்கள் மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் (ஜி.ஜெ.இ.பி.சி.) அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி கடந்த ஜனவரியில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கான தங்க ஆபரணங்கள் மற்றும் ரத்தினங்கள் ஏற்றமதி மதிப்பு ரூ.2 லட்சத்து 3 ஆயிரம் கோடி (2,238 மில்லியன் டாலர்கள்) ஆக இருந்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு ஏற்றுமதி மதிப்பை காட்டிலும் 5.79 சதவீதம் குறைவாகும்.

2025-ம் ஆண்டு ஜனவரியில் நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி மதிப்பு ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் கோடி (2,376 மில்லியன்) ஆகும். அமெரிக்காவின் ஏற்றுமதி மதிப்பு 45 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்ததே இதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

SCROLL FOR NEXT