வணிகம்

மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு ஆயிரம் புள்ளிகள் உயர்வு

இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக 9 பைசாக்கள் உயர்ந்து ரூ.95.06 என்ற அளவில் இருந்தது.

மும்பை

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 1,081.61 புள்ளிகள் வரை உயர்ந்து 73,863.50 புள்ளிகளாக இருந்தது.

இந்திய பங்கு சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. இதில், மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு காலை 11 மணியளவில் அதிரடியாக 1,081.61 புள்ளிகள் (1.49 சதவீதம்) வரை உயர்ந்து 73,863.50 புள்ளிகளாக இருந்தது. எண்ணெய் விலை சரிவால் இந்த லாப நிலை காணப்படுகிறது.

இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 314.60 புள்ளிகள் (1.39 சதவீதம்) உயர்ந்து 22,937.30 புள்ளிகளாக நிலை கொண்டது. இதனால், இந்திய பங்கு சந்தைகள் லாப நோக்குடன் காணப்பட்டன. இவற்றில் 1,662 பங்குகள் லாபத்துடன் இருந்தன. எனினும், 1,935 பங்குகள் நஷ்டத்துடன் காணப்பட்டன. 190 பங்குகள் மாற்றமின்றி இருந்தன.

இந்திய ரூபாயின் மதிப்பு

துறை ரீதியாக பார்க்கும்போது, தகவல் தொழில் நுட்ப துறையில் பங்குகள் அதிக அளவாக 2 சதவீதம் அளவுக்கு லாப நோக்கத்துடன் காணப்பட்டன. ஆனால், பொதுத்துறை வங்கிகள் மற்றும் நுகர்வோர் பங்குகள் 2 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன.

இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக 9 பைசாக்கள் உயர்ந்து ரூ.95.06 என்ற அளவில் இருந்தது. நேற்று வர்த்தக நிறைவில் அது ரூ.95.15 ஆக இருந்தது.

SCROLL FOR NEXT