வணிகம்

தனிநபர் வருமானம்: இந்தியாவை முந்தும் வங்கதேசம்

இந்தியாவின் தனிநபர் வருமானம் 2,812 டாலராகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு படி 2026 ஆம் ஆண்டில் தனி நபர் வருமானத்தில் இந்தியாவை வங்கதேசம் முந்த உள்ளது. 2026-ல் வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் 2,911 டாலராகவும், இந்தியாவின் தனிநபர் வருமானம் 2,812 டாலராகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா தற்பொது 6 வது இடத்திற்கு சரிந்துள்ளது. இருப்பினும், இந்த சரிவில் இருந்து இந்தியா விரைவில் மீளும் என்றும் பொருளாதாரத்தில் இந்தியா 3 வது பெரிய நாடாக விரைவில் மாறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.