வணிகம்

தேவை அதிகரிப்பு: மின்சார அடுப்பு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனை

மின்சார அடுப்பு, அதற்கான பாத்திரங்கள் உற்பத்தியை அதிகரிக்குமாறு உற்பத்தி நிறுவனங்களை வலியுறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மேற்கு ஆசிய போரால் சமையல் கியாசுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் மக்கள், சமையலுக்கான மாற்று பயன்படாக மின்சாரத்தில் இயங்கும் இன்டக்ஷன் ஸ்டவ் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி உள்ளனர். அதனால் அதன் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், மின்சார அடுப்பு, அதற்கான பாத்திரங்கள், இன் டக்ஷன் ஹீட்டர் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்குமாறு உற்பத்தி நிறுவனங்களை வலியுறுத்த மத்திய அரசு திட்டமிட் டுள்ளது.

இதற்காக மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் தலைமையில் மின்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் பங் கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், நிறுவனங்கள் மின்சார அடுப்பு உற்பத்தியை அதிகரிக்க எடுக்க வேண்டிய நட வடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT