வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் சரிவு

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இறக்குமதி பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மும்பை,

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

காலையில் 95.94 ஆக இருந்தநிலையில் மதியம் ரூபாயின் மதிப்பு 96.11 ஆக சரிவை சந்தித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இறக்குமதி பொருட்களுக்கான விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

டாலர் மதிப்பில் பணம் செலுத்தி கச்சா எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக செலவாகிறது.

இந்திய பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் ரூபாய் மதிப்பு தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.