வணிகம்

அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மும்பை,

அமெரிக்கா, ஈரான் இடையேயான மோதலால் மத்திய கிழக்கில் தொடர் பதற்றம் நிலவி வந்தது. இந்த மோதல் இந்திய பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே, அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணிந்துள்ளது. இந்த அமைதி ஒப்பந்தம் சர்வதேச அளவில் பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த வகையில், இந்திய பங்குச்சந்தை இன்று (16.06.2026 - செவ்வாய்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

பங்குச்சந்தை உயர்வு

அதன்படி, 135 புள்ளிகள் ஏற்றம் பெற்ற நிப்டி 23 ஆயிரத்து 989 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 98 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 297 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது

167 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 26 ஆயிரத்து 442 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 544 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 808 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

77 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 503 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 131 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 64 ஆயிரத்து 545 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.