வணிகம்

வர்த்தக நிறைவில் 2-வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள்

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை முடிவு நாளை வெளியிடப்பட உள்ள சூழலில், முதலீட்டாளர்கள் தொடர்ந்து உன்னிப்பாக அதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

மும்பை

இந்திய பங்குச்சந்தைகள் இன்று 2-வது நாளாக ஏற்றம் கண்டுள்ளன.

இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து 2-வது நாளாக இன்று ஏற்றம் கண்டது. இதன்படி, நாள் முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 685.34 புள்ளிகள் அல்லது 0.95 சதவீதம் உயர்ந்து 73,067.81 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 220.35 புள்ளிகள் அல்லது 0.98 சதவீதம் உயர்ந்து 22,776.10 புள்ளிகளில் நிலை கொண்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வந்த நிலையில், நேற்றும், இன்றும் காணப்படும் இந்த ஏற்றம் முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிறுவனங்களும் லாபம் அடைந்துள்ளன.

லாபம் ஈட்டிய நிறுவனங்கள்

இதில், டிரென்ட், கோடக் மஹிந்திரா வங்கி, எச்.யு.எல்., எச்.டி.எப்.சி. லைப், ஜியோ பைனான்சியல் ஆகியவை நிப்டியின் முக்கிய லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன. எனினும் கோல் இந்தியா, டெக் மஹிந்திரா, மேக்ஸ் ஹெல்த்கேர், ஐ.டி.சி. மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளன.

இதற்கு கச்சா எண்ணெய் விலை குறைவு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. அதனுடன், ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை முடிவு நாளை வெளியிடப்பட உள்ள சூழலில், முதலீட்டாளர்கள் தொடர்ந்து உன்னிப்பாக அதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இவை சந்தைகளில் லாப நோக்குடன் பங்குகள் விற்பனைக்கான காரணிகளாக உள்ளன.

SCROLL FOR NEXT