வைர நிபுணத்துவ ஆய்வகத்தின் நவீன கருவிகள் 
வணிகம்

தனிஷ்க்கின் புதிய முயற்சிகள்: வைர மதிப்பீட்டு மையம் முதல் பிரத்யேக திருமண நகைத் தொகுப்பு வரை!

நவீன கருவிகளைப் பயன்படுத்தி வைரத்தின் தரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வாடிக்கையாளர்கள் நேரடியாகப் புரிந்து கொள்ளும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை:

வாடிக்கையாளர்களுக்கு நகைகளின் தரம், தனித்தன்மை மற்றும் வடிவமைப்பு குறித்து நேரடியான அனுபவத்தை வழங்கும் வகையில், தனிஷ்க் பல்வேறு புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வைரங்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை வாடிக்கையாளர்களே அறிவியல் முறையில் அறிந்து கொள்ளும் வகையில் ‘டைமண்ட் எக்ஸ்பெர்டைஸ் சென்டர்’ (DXC) மையங்கள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

ஒரேயொரு மையத்துடன் தொடங்கப்பட்ட இந்த முயற்சி இப்போது 225-க்கும் மேற்பட்ட தனிஷ்க் விற்பனை நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. விரைவில் இந்தியா முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட தனிஷ்க் விற்பனை நிலையங்களிலும் DXC வசதி ஏற்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

அறிவியல் முறையில் வைர பரிசோதனை

DXC மையங்களில், ஆய்வகத் தரம் வாய்ந்த நவீன கருவிகளைப் பயன்படுத்தி வைரத்தின் பல்வேறு அம்சங்களை வாடிக்கையாளர்கள் நேரடியாகப் புரிந்து கொள்ளும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. டைமண்ட் கேரட்மீட்டர் மூலம் வைரத்தின் தன்மையை சரிபார்க்கவும், கிளாரிட்டி வியூவர் மூலம் அதன் உட்புற அமைப்பை ஆய்வு செய்யவும் முடியும். அதேபோல், லைட்ஸ்கோப் மூலம் வைரத்தின் ஒளிர்வு, ஒளிச்சிதறல் மற்றும் மின்னும் தன்மை குறித்து அறிந்து கொள்ளலாம். மார்க்கிங் வியூவர் கருவி மூலம் வைரத்தில் பொறிக்கப்பட்டுள்ள தனித்துவ அடையாள எண்ணையும் வாடிக்கையாளர்கள் நேரடியாகக் காண முடியும்.

லைட் ஸ்கோப்

தொழில்நுட்பங்கள்

பயிற்சி பெற்ற நவரத்தின நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் இந்த மதிப்பீட்டு சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், தனிஷ்க்கில் வாங்கிய வைரங்கள் மட்டுமின்றி, வாடிக்கையாளர்களிடம் ஏற்கனவே உள்ள வைர நகைகளையும் DXC மையங்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம். இதுவரை 1.70 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த முயற்சிக்கு தனிஷ்க் ஜெம்மலாஜிக்கல் லேபின் 25 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவம் பின்னணியாக உள்ளது. 10 கோடிக்கும் மேற்பட்ட வைரங்களை மதிப்பீடு செய்த அனுபவத்துடன், 4C தர நிர்ணயத்துடன் சேர்த்து வைரத்தின் Fire, Scintillation மற்றும் Sparkle போன்ற அம்சங்களிலும் ஆய்வகம் கவனம் செலுத்துகிறது. ஸ்பெக்ட்ரோஃபோட்டோமெட்ரி மற்றும் ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி போன்ற தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

மணப்பெண்களுக்காக ‘வெட்டிங் சிக்னேச்சர்ஸ்’

இதனிடையே, தனிஷ்க்கின் பிரத்யேக திருமண நகை பிராண்டான ‘ரிவா பை தனிஷ்க்’, ‘வெட்டிங் சிக்னேச்சர்ஸ்’ என்ற புதிய நகைத் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, ராஜஸ்தானி/மார்வாடி, குஜராத்தி, மராத்தி மற்றும் பான்-இந்தியா/மெட்ரோ என ஆறு முக்கிய கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்தத் தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருமணத்தின் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரே நகைத் தொகுப்பைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, ஒவ்வொரு சடங்கு மற்றும் தருணத்திற்கும் ஏற்ற தனித்துவமான நகைகளைத் தேர்வு செய்யும் நடைமுறை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, முழுமையான ‘ஜூவல்லரி வார்ட்ரோப்’ என்ற அணுகுமுறையில் இந்தத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியத்தை பறைசாற்றும் கலெக்சன்

தமிழ் மணப்பெண்களுக்கான நகைத் தொகுப்பில் பாரம்பரிய கோவில் நகைகளின் கம்பீரத்தை அடிப்படையாகக் கொண்டு, தாமரையில் அமர்ந்த லட்சுமி, மயில் வடிவங்கள் உள்ளிட்ட பாரம்பரிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. நவரத்தினக் கற்கள், கிளாஸ் குந்தன், CZ வேலைப்பாடுகள் மற்றும் முத்துகள் மூலம் நகைகளுக்கு கூடுதல் வண்ணமும் ஒளிர்வும் வழங்கப்பட்டுள்ளன.

‘வெட்டிங் சிக்னேச்சர்ஸ்’ தொகுப்பு ‘ஒரு திருமணம். பல கதைகள்.’ என்ற பிரசாரத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருமண இடம், புகைப்படம் மற்றும் திரைப்படக் காட்சிகள் மூலம் வெவ்வேறு கலாச்சாரங்களின் திருமண அனுபவத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தனிஷ்க்கின் ‘வெட்டிங் சிக்னேச்சர்ஸ்’ நகைத் தொகுப்பு தற்போது அனைத்து தனிஷ்க் விற்பனை நிலையங்களிலும் ஆன்லைனிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

SCROLL FOR NEXT