மும்பை,
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக தொடர் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தை இன்று (18.03.2026 - புதன்கிழமை) அதிரடியாக உயர்ந்தது.
அதன்படி, 196 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 23 ஆயிரத்து 777 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 450 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 326 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 202 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 25 ஆயிரத்து 927 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
633 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 704 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
244 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 980 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 533 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 197 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.