வணிகம்

கடும் சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை: இன்றைய நிலவரம்

மத்திய கிழக்கு போர் இந்திய பங்குச்சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போரால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இது இந்திய பங்குச்சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தை அதன்பின்னர் தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

குறிப்பாக, கடந்த மாத இறுதியில் மத்திய கிழக்கில் தொடங்கிய போரால் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது. போர் தொடங்கியதுமுதல் நிப்டி 2 ஆயிரம் புள்ளிகளுக்குமேல் வீழ்ச்சியடைந்துள்ளது.

அந்த வகையில் வாரத்தின் இறுதிநாளான இன்று (13.03.2026 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதன்படி, 488 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 151 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 343 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 53 ஆயிரத்து 757 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

524 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 25 ஆயிரத்து 138 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 470 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 74 ஆயிரத்து 563 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

342 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 618 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 513 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 60 ஆயிரத்து 462 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.