மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று (15.07.2026 - புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதன்படி, 26 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 78 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 295 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 757 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
156 புள்ளிகள் அதிகரித்த பின் நிப்டி 26 ஆயிரத்து 693 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 130 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 185 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
58 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 771 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 339 புள்ளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 360 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.