மும்பை,
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி,
இந்திய பங்குச்சந்தை இன்று (22-04-2026 - புதன்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
அதன்படி, 140 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 435 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 9 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 364 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .
123 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 727 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 562 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 78 ஆயிரத்து 727 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
52 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 973 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 31 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 64 ஆயிரத்து 702 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.