சென்னை,
கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் நேற்று (31.05.2026 - ஞாயிற்றுக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.95.00 -க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) சென்னையில் பெட்ரோல், டீசல் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து ரூ.107.87-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.99.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது.