மும்பை

லாத்தூரில் வாகனம் மோதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் பலி

லாத்தூரில் வாகனம் மோதிய விபத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் பலியானார்

லாத்தூர், 

ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த வீரர் லிங்குபெரு ரவி (வயது41). இவர் லாத்தூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்தார். நேற்று காலை 6.30 மணி அளவில் லாத்தூர்-நாந்தெட் சாலையில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயம் அடைந்த அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் சமீபத்தில் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வேலைக்கு திரும்பி வந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

SCROLL FOR NEXT