சினிமா

புராண கால வரலாற்று பின்னணியில் ஆரி அர்ஜுனனின் திரில்லர் படம்

இந்த படத்தில் ஆரிக்கு ஜோடியாக பூஜிதா நடிக்கிறார்.

முன்னணி நடிகரான ஆரி அர்ஜுனன், தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் 'கோலிசோடா-3' மற்றும் சேரன் இயக்கத்தில் டாக்டர் ராமதாசின் வாழ்க்கையை மையப்படுத்தும் 'அய்யா' படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் அம்மன்யா மூவிஸ் சார்பில் சி.வி.மஞ்சுநாதா தயாரித்து, சு.காளிங்கன் இயக்கத்தில் உருவாகும் 'பகவான்' என்ற படத்தில் ஆரி கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பூஜிதா நடிக்கிறார். முன்னணி நடிகர்கள் நடிக்கும் இப்படத்தை செவன்த் ஸ்டூடியோஸ் சார்பில் கண்ணன் வெளியிடுகிறார். இப்படத்திற்கு முருகன் சரவணன் செய்ய,பிரசன் பாலா இசையமைக்கிறார்.

வித்தியாசமான கதைக்களத்துடன் புராண கால வரலாற்று பின்னணியில் இப்படம் உருவாகி வருவதாக இயக்குனர் காளிங்கன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "கடவுள் யார்? அவர் வெறும் உருவமா? இல்லை வேறெதுவுமா? என்ற கேள்விக்கான பதில் தான் இப்படத்தின் மையம். நாம் அறியாத புராண கால வரலாற்றின் பின்னணியில் புதிர்கள் நிறைந்த திரில்லராக உருவாக்கியுள்ளோம். மகாபாரத கதையின் ஒரு பகுதியும் இதில் வரும். இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் விரைவில் டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்”, என்றார்.

SCROLL FOR NEXT