அருண் விஜய் ஜோடியாக ரெஜினா கசன்ட்ரா நடிக்கிறார். படத்தைப் பற்றி டைரக்டர் அறிவழகன் கூறும்போது, இது ஒரு போலீஸ் கதை. ரகசிய போலீஸ் அதிகாரியாக அருண் விஜய் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரெஜினா கசன்ட்ரா நடிக்கிறார். இவரும் போலீஸ் அதிகாரியாகவே வருகிறார்.
இதுவரை நான் இயக்கிய படங்களில், அதிரடியான அதிக சண்டை காட்சிகளை கொண்ட படம், இதுதான். படத்துக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை. பொருத்தமான டைட்டிலை தேடி வருகிறோம் என்றார்.