திருவனந்தபுரம்,
தமிழகம், மேற்குவங்கம். அசாம், கேரளம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றிக்கு கடந்த மாதம் 15ந் தேதி தேர்தல் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது. அவற்றில் அசாம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது.
140 தொகுதிகளைக் கொண்ட கேரள மாநிலத்தில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது. இங்கு தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி பீடத்தில் அமர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியும் தனது பலத்தை காட்ட கோதாவில் உள்ளது. இங்கு பிரதான கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்பட 883 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், நடிகர் மோகன்லால் மற்றும் சுரேஷ் கோபி ஆகியோர் மக்களுடன் வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.