சினிமா செய்திகள்

2026 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் : வெற்றியாளர்கள் யார் யார்? முழு பட்டியல்

ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.

சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஆஸ்கர் விருது ஆகும். இந்த ஆஸ்கர் விருதினை அடைவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்சல்ஸில் இந்த விழா நடைபெறுகிறது.

அந்த வகையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற 'டால்பி' திரையரங்கில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4:30 மணிக்குத் தொடங்கிய இந்த 98வது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சின்னர்ஸ், ஒன் பேட்டில் ஆப்டர் அனதார், அவதார் பயர் அண்ட் ஆஸ், பிராங்கன்ஸ்டைன், எலியோ, கே பாப் டீமான் ஹன்டர் போன்ற படங்கள் விருதுகளை வென்றன.

2026 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் பெற்றவர்களின் முழு பட்டியல் இதோ:

* சிறந்த படம்

ஒன் பேட்டில் ஆப்டர் அனதார் (One Battle After Another)

* சிறந்த இயக்குனர்

பால் தாமஸ் ஆண்டர்சன் (One Battle After Another)

* சிறந்த நடிகை

ஜெஸ்ஸி பக்லி (hamnet)

* சிறந்த நடிகர்

மைக்கேல் பி. ஜோர்டன் (Sinners)

* சிறந்த சர்வதேச திரைப்படம்

சென்டிமென்டல் வால்யூ (நார்வே)

* சிறந்த துணை நடிகர்

ஷான் பென் (One Battle After Another)

* சிறந்த மூல திரைக்கதை

சின்னர்ஸ்

* சிறந்த தழுவல் திரைக்கதை

ஒன் பேட்டில் ஆப்டர் அனதார்

* சிறந்த அனிமேஷன் குறும்படம்

தி கேர்ள் க்கூ கிரைடு பெர்ல்ஸ் (The Girl Who Cried Pearls )

* சிறந்த நேரடி குறும்படம்

தி சிங்கர்ஸ் (The Singers)

* சிறந்த பின்னணி இசை

சின்னர்ஸ்

* சிறந்த மேக்கப் மற்றும் தலைமுடி அலங்காரம்

பிராங்கென்ஸ்டைன் (Frankenstein)

* சிறந்த துணை நடிகை

ஏமி மேடிகன் (Weapons)

* சிறந்த நடிகர் தேர்வு (Casting)

சீன் பென் -(One Battle After Another)

* சிறந்த உடை வடிவமைப்பு

பிராங்கென்ஸ்டைன்

* சிறந்த ஒளிப்பதிவு

சின்னர்ஸ்

* சிறந்த விஷுவல் எப்பெக்ட்ஸ்

அவதார்: பயர் & ஆஷ் (Avatar: Fire & Ash)

* சிறந்த ஒலி வடிவமைப்பு

எப்-1 (F1)

* சிறந்த கலை அமைப்பு

பிராங்கென்ஸ்டைன்

* சிறந்த தொகுப்பு (எடிட்டிங்)

ஒன் பேட்டில் ஆப்டர் அனதார்

* சிறந்த முழுநீள அனிமேஷன் திரைப்படம்

கே-பாப்: டீமன் ஹண்டர்ஸ்

* சிறந்த ஆவண குறும்படம்

டூ பீப்பிள்ஸ் எக்ஸ்சேஞ்சிங் சலைவா (Two People Exchanging Saliva)

* சிறந்த ஆவணப்படம்

மிஸ்டர் நோபடி அகென்ஸ்ட் புதின் (Mr Nobody Against Putin)

* சிறந்த அசல் பாடல்

கோல்டன் (கே-பாப்: டீமன் ஹண்டர்ஸ்)