பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங், ஆர். மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்த ‘துரந்தர்’ திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூல் செய்து மெகா ஹிட் ஆனது.
இதனைத் தொடர்ந்து, முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ என்ற பெயரில் இப்படத்தின் இரண்டாம் பாகம் நேற்று (மார்ச் 19) வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனால், தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ் மொழியில் படம் வெளியாகாததால், ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாளிலேயே ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் சாதனையைப் பதிவு செய்துள்ளது. இந்திய சினிமாவின் பிரமாண்ட தொடக்கமாக இத்திரைப்படம் பார்க்கப்படுகிறது.