சினிமா செய்திகள்

சென்சார் சிக்கலை கடந்து வரும் ‘418’ படம்... மிரட்டும் டிரெய்லர் வெளியீடு

கீர்த்தன் நடகௌடா இயக்கிய ‘418’ திரைப்படம் வருகிற 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

‘418’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. திகிலூட்டும் காட்சிகளுடன் வெளியாகியுள்ள டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஹாரர் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘418’ திரைப்படம், 15 ஆண்டுகளாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியின் ‘ரூம் நம்பர். 418’-ஐ மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அறையைச் சுற்றி நடைபெறும் மர்மமான மற்றும் பயமுறுத்தும் சம்பவங்களே படத்தின் முக்கியக் கதைக்களமாக அமைந்துள்ளன. நகைச்சுவை கலந்த ஹாரர் திரைப்படங்களுக்கு மத்தியில், ‘418’ ஒரு சீரியஸ் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சென்சார் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

‘418’ திரைப்படம் முதலில் ஜூலை 31-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் (CBFC) சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. படத்தில் அதிகப்படியான ஹாரர் அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாக சென்சார் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால், படம் ‘ஏ’ சான்றிதழுடன் வெளியாகும் சூழல் ஏற்பட்டது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

பிரசாந்த் நீலிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்

இயக்குநர் பிரசாந்த் நீலிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கீர்த்தன் நடகௌடா, ‘418’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.

திகிலூட்டும் டிரெய்லர் வெளியானது

‘418’ திரைப்படம் வருகிற 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘418’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. திகிலூட்டும் காட்சிகளுடன் வெளியாகியுள்ள டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

SCROLL FOR NEXT