சினிமா செய்திகள்

அல்லு அர்ஜுனை சந்திக்க 42 ரூல்ஸ்?.. அவதூறு வழக்கு தொடர்ந்த நடிகர் தரப்பு

அல்லு அர்ஜுன் தரப்பு இது பொய்யான குற்றச்சாட்டு என கூறி அந்த பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், ‘புஷ்பா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா நட்சத்திரமாக வலம் வருகிறார். இந்நிலையில், அல்லு அர்ஜுனை சந்திக்க சென்ற போது தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து காவேரி என்ற பெண் ஒருவர் அளித்த பேட்டி தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அந்த பேட்டியில், அல்லு அர்ஜுனை நேரில் சந்திக்கும்போது 42 விதிமுறைகள் விதிக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். “கை குலுக்கக் கூடாது, நேருக்கு நேர் பார்க்கக் கூடாது” உள்ளிட்ட பல நிபந்தனைகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில், அல்லு அர்ஜுன் தரப்பு இது பொய்யான குற்றச்சாட்டு என கூறி அந்த பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர். அந்த அறிக்கையில் "நடிகர் அல்லு அர்ஜுன் பற்றிய கருத்துக்கள் ஆதாரமற்றவை, உண்மைக்குப் புறம்பானவை. அவர் மிகுந்த கண்ணியத்துடன் நடப்பவர். இந்த பொய்யான குற்றச்சாட்டுகளை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டு, பொறுப்பானவர்கள் மீது அவதூறு வழக்கு நடவடிக்கை தொடங்கியுள்ளோம்" என்று அறிக்கை ஒன்றை அதிரடியாக வெளியிட்டுள்ளனர்.