சினிமா செய்திகள்

5 நாட்களில் ரூ. 11.35 கோடி வசூல் செய்த விஜய் சேதுபதியின் ’பத்தா’ திரைப்படம்

பத்தா திரைப்படம் கடந்த 1ம் தேதி ரிலீஸ் ஆனது

சென்னை,

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான பத்தா திரைப்படம் கடந்த 1ம் தேதி ரிலீஸ் ஆனது.

பத்தா

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் பத்தா. இப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் சாய் பிரிதிவ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை இயக்குநர் அட்லீயின் 'ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்' நிறுவனமும், 'ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 சினி1 ஸ்டுடியோஸ்' நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளன. 28 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் கடந்த 1ம் தேதி ரிலீஸ் ஆனது.

ரூ. 11.35 கோடி வசூல்

இந்நிலையில் பத்தா திரைப்படம் கடந்த 1ம் தேதி ரிலீஸ் ஆன நிலையில் இப்படம் கடந்த 5 நாட்களில் ரூ. 11.35 கோடி வசூல் செய்துள்ளது. விமர்சன ரீதியில் பத்தா படம் வரவேற்பை பெற்ற நிலையில் வசூல் ரீதியில் சற்று சரிவையே இப்படம் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT