57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது. ‘எல்லைகளைக் கடந்த கதைகள்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இவ்விழாவில், 137 நாடுகளில் இருந்து 1,900-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விழாவில் இந்தியாவில் இருந்து பல மொழி நடிகர்-நடிகைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்தத் திரைப்பட விழாவில் 137க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 1,900க்கும் அதிகமான படங்கள் பரிசீலனைக்கு வந்தன. இதில் 86 நாடுகளில் இருந்து 150க்கும் அதிகமான சர்வதேச படங்கள் திரையிட தேர்வாகியுள்ளன. இந்தியத் திரைப்படப் பிரிவில் 18 மொழிகளைச் சேர்ந்த 76 படங்கள் இடம்பெறுகின்றன.
இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்கமாக ‘துரந்தர்’ படமும் இறுதியாக ‘பிகம்மிங்’ என்ற படமும் திரையிடப்படும். நிவின் பாலி நடித்த ‘சர்வம் மாயா’ படமும் இந்தப் பிரிவில் திரையிட தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிக்ஸ் சினிமாவின் தொடக்கமாக ‘ராமாயணா’ படம் திரையிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் கோவாவில் நடைபெறும் 57வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட தேர்வாகியுள்ளது.
சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அறிவு’ படம் டிசம்பர் 11ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், வெளியாவதற்கு முன்பே இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ளது ரசிகர்கள் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது.