சினிமா செய்திகள்

தேசிய திரைப்பட விருது விழா டெல்லியில் இருந்து குஜராத்துக்கு மாற்றம்

72-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய திரைப்பட விருதுகள் வரும் 22ம் தேதி வழங்கப்பட உள்ளது.

72வது தேசிய திரைப்பட விருதுகள் விழா டெல்லிக்கு பதிலாக குஜராத்தில் நடைபெற உள்ளது.

72வது தேசிய திரைப்பட விருதுகள்

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் ‘தேசிய விருதுகள்’ வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகினறன. இந்திய சினிமாவில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த கலை பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய விருதுகள் மிகவும் மதிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும்

இந்நிலையில் 72வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா வரும் செப்டம்பர் 22 அன்று, குஜராத் மாநிலத்தில் உள்ள ஏக்தா நகரில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்கவுள்ளார்.

டெல்லி டூ குஜராத்

1954-இல் தொடங்கப்பட்ட தேசிய திரைப்பட விருது விழாக்கள், 72 ஆண்டு காலமாக தலைநகர் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன.தற்போது முதன்முறையாக இந்த மரபு உடைக்கப்பட்டு தலைநகருக்கு வெளியே குஜராத்தில் நடைபெறுகிறது.1974 முதல் 2022 வரை திரைப்பட விழாக்கள் இயக்ககத்தால் (DFF) நடத்தப்பட்டு வந்த விழா, 2022 முதல் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (NFDC) மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

2024-ஆம் ஆண்டு திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிப்பு

சிறந்த திரைப்படம்: ஆதித்ய சுஹாஸ் ஜம்பாலே இயக்கத்தில் வெளியான ‘ஆர்டிகிள் 370’ சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகை: ‘ஆர்டிகிள் 370’ திரைப்படத்தில் நடித்ததற்காகத் தலைசிறந்த நடிகைக்கான விருதை யாமி கௌதம் வென்றுள்ளார்.

சிறந்த நடிகர்: மலையாளத் படமான ‘பிரமயுகம்’ படத்தில் நடித்ததற்காக நடிகர் மம்மூட்டி தனது 4-வது தேசிய விருதையும், ‘சந்து சேம்பியன்’ படத்தில் நடித்ததற்காகக் கார்த்திக் ஆர்யனும் சிறந்த நடிகருக்கான விருதை பெறுகின்றனர்.

சிறந்த அறிமுக இயக்குநர்: ‘சுவதந்திரிய வீர் சவர்க்கர்’ திரைப்படத்தை இயக்கிய ரன்தீப் ஹூடாவுக்குச் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது வழங்கப்படுகிறது.

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான தெலுங்கு படமான ‘கல்கி 2898 ஏ.டி’ சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக தேர்வாகியுள்ளது.

தேசிய ஒருங்கிணைப்பு திரைப்படம்: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் தேசிய மற்றும் சமூக விழுமியங்களை வலியுறுத்தும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது.

SCROLL FOR NEXT