சினிமா செய்திகள்

ஓ.டி.டி. வெளியீட்டில் 8 வார விதிமுறை: வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு ஒருமனதாக தீர்மானம்

புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்னர் குறைந்தபட்சம் 8 வாரங்கள் கழித்தே ஓ.டி.டி. தளங்களில் வெளியிடப்பட வேண்டும்

சென்னை,

குறைந்தபட்சம் 8 வாரங்கள் கழித்தே ஓ.டி.டி. தளங்களில் வெளியிடப்பட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தை கேட்டுக்கொள்வது என்று கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை, சேலம், தென் ஆற்காடு, வட ஆற்காடு, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது.

இதில் தலைவராக கே.மோகன்குமார், செயலாளராக எஸ்.நந்தகோபால், பொருளாளர் டி.குமார் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தக் கூட்டத்தில் திரைப்படத் தொழிலை நம்பிக்கையுடன் தொடர்ந்து நடத்துவதற்கும், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களின் நலனை பாதுகாப்பதற்கும் தயாரிப்பாளர்களின் ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

8 வாரங்கள் கழித்தே ஓ.டி.டி.

மேலும் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்னர் குறைந்தபட்சம் 8 வாரங்கள் கழித்தே ஓ.டி.டி. தளங்களில் வெளியிடப்பட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தை கேட்டுக்கொள்வது என்று கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT