சினிமா செய்திகள்

முன்னணி நடிகையுடன் மோதலா?.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த திரிஷா

வதந்திகளையும் விமர்சனங்களையும் நான் பெரிதாக எடுத்து கொள்வது கிடையாது என திரிஷா தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்கு வந்த திரிஷாவும், அசினும் முன்னணி நடிகைகளாக உயர்ந்தனர். பல வெற்றி படங்களிலும் நடித்தனர். இதில் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் போதே, அசின் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். 42 வயதாகும் திரிஷா இளம் நடிகைகளுக்கு போட்டியாக களத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

நீண்ட காலமாகவே திரிஷா - அசின் இடையே கருத்து மோதல், இருவருக்கும் சண்டை என்றெல்லாம் தகவல்கள் வெளியாகிகொண்டிருந்தது. இதற்கிடையில் இதுகுறித்து திரிஷா விளக்கம் அளித்து இருக்கிறார்.

திரிஷா கூறும்போது, " அசின் மட்டுமல்ல எந்த நடிகைகளுடனும் எனக்கு மோதல் ஏற்பட்டது கிடையாது. ஏதாவது விழாக்களில் சந்தித்துக் கொண்டால் கூட அசினும் நானும் பேசிக் கொள்வோம். ஆனால் எங்களுக்கிடையே சண்டை என்றெல்லாம் பரப்பி விட்டார்கள். எங்களுக்குள் எந்த விஷயத்திலும் மோதல் போக்கு இருந்தது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் பெரிய அளவில் அசினுடன் நான் பேசி பழகியது கூட கிடையாது. ஆனாலும் வதந்திகளையும் விமர்சனங்களையும் நான் பெரிதாக எடுத்து கொள்ளாததால் இது பற்றி கவலைப்படுவதில்லை", என்றார்.