சினிமா செய்திகள்

சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்... தீபாவளியன்று வெளியாகிறதா ‘அரசன்’ அப்டேட்?

“அரசன்” திரைப்படம் 2027ஆம் ஆண்டு பொங்கலுக்கு வரும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

சென்னை.

‘அரசன்' திரைப்படத்திலிருந்து சுமார் 8 நிமிட பிரத்யேகக் காட்சிகள் தீபாவளியன்று வெளியாகும் எனத் தகவல் கிடைத்துள்ளது. இதில் கதாபாத்திர அறிமுகங்கள் மற்றும் முக்கியக் காட்சிகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேங்ஸ்டர் கதையில் 'அரசன்'

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் (எஸ்டிஆர்) நடித்து வரும் 'அரசன்' திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையில் வெளியாகுமா?

4மாதங்களுக்கு முன் 'அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்பட்டு, படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு பகலாக படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தரமான சம்பவம் காத்திருக்கு!

ஆனால், சென்னையில் நடைபெற்ற சமீபத்திய கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிலம்பரசன், “அரசன் திரைப்படம் 2027ஆம் ஆண்டு பொங்கலுக்கு வரும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பொங்கலுக்கு படம் ரிலீஸாகவில்லை. படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்ய நாங்கள் விரும்பவில்லை. நீங்கள் அனைவருமே பெருமைப்படும் வகையில் அரசன் படம் தரமான சம்பவத்தை செய்யும்” என்று தெரிவித்திருந்தார்‘

தீபாவளி விருந்து

இந்த நிலையில், அரசன் படத்திலிருந்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ‘அரசன்' திரைப்படத்திலிருந்து சுமார் 8 நிமிட பிரத்யேகக் காட்சிகள் தீபாவளியன்று வெளியாகும் எனத் தகவல் கிடைத்துள்ளது. இதில் கதாபாத்திர அறிமுகங்கள் மற்றும் முக்கியக் காட்சிகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தீபாவளியன்று வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் இரட்டை விருந்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

SCROLL FOR NEXT