தமிழில் வளர்ந்துவரும் இசையமைப்பாளர்களில் ஒருவர் நிவாஸ் கே பிரசன்னா. இவர் இசையமைப்பில் உருவான தெகிடி, சேதுபதி உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்புடனே இருக்கின்றன.
பைசன் படத்தில் இடம்பெற்றிருந்த தென்னாட்டு தேசத்துல, தீக்கொளுத்தி பாடல்கள் பெரிய ஹிட் அடித்தன. இவரின் இசையில் வெளியான கும்கி 2 படத்தின் பாடல்களும் சிறந்த வரவேற்பை பெற்றது. தற்போது அருள்நிதி நடிக்கும் 'மை டியர் சிஸ்டர்' படத்திற்கும் இவர் இசையமைத்து வருகிறார்.
இந் நிலையில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். ஜடா திரைப்படத்தை இயக்கிய குமரன் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் நிவாஸுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்க உள்ளது.
View this post on Instagram