சினிமா செய்திகள்

‘ஸ்லம் டாக்’ படத்தில் தபுவின் கதாபாத்திர கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

தபு இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக கெளரி ஹெக்டே என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சென்னை,

தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோடு’ படத்தில் நடித்த நடிகை தபுவின் கதாபாத்திரத்திற்கான கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி, பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படம், மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது.

முன்னணி நட்சத்திரங்கள்

பூரி ஜெகநாத் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் தபு, சம்யுக்தா மேனன், நிவேதா தாமஸ் மற்றும் நடிகர் துனியா விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர்

‘ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் படத்தின் டீசர் வெளியானது. அதிரடி காட்சிகளுடன் வெளியான டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, டீசருக்காக இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் அமைத்துள்ள இசையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தபுவின் கதாபாத்திரம் வெளியானது!

இந்த நிலையில், படத்தில் நடித்துள்ள நடிகை தபுவின் கதாபாத்திரத்திற்கான கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, தபு இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக கெளரி ஹெக்டே என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தபுவின் கதாபாத்திரம் குறித்த சில காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. விஜய் சேதுபதி மற்றும் தபு இணைந்து நடிக்கும் காட்சிகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.