மும்பை,
'கிங்' படத்தில் இடம்பெற உள்ள பிரம்மாண்ட பாடலுக்கான படப்பிடிப்பு பணிகள் அக்டோபர் 26-ம் தேதி மும்பையில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘வார்’, ‘பதான்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இப்படத்தை இயக்குவதால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘கிங்’ திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். மேலும், ஷாருக்கானின் மகள் சுஹானா கானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆக்ஷன் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘கிங்’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. இதில் இடம்பெற்ற காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகும் இப்படம், ஷாருக்கானின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘கிங்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. படத்தின் முழுப் படப்பிடிப்பையும் இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பு பணிகளை விரைவில் முடித்துவிட்டு, படத்தின் வெளியீட்டுக்கான அடுத்தகட்ட பணிகளைத் தொடங்க படக்குழு தயாராகி வருகிறது. ‘கிங்’ திரைப்படம் டிசம்பர் 24-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், 'கிங்' படத்தில் இடம்பெற உள்ள பிரம்மாண்ட பாடலுக்கான படப்பிடிப்பு பணிகள் அக்டோபர் 26-ம் தேதி மும்பையில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பாடலுக்கு நடன இயக்குநர் வைபவி மெர்ச்சண்ட் நடன அமைப்பு செய்யவுள்ளதாகவும், படப்பிடிப்பு சுமார் ஒரு வாரம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஷாருக்கான், தீபிகா படுகோனே இணைந்து நடனமாடும் இந்த பாடலின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது‘