சினிமா செய்திகள்

‘பகவான்’ வேடத்தில் ஆரி நடிக்கும் திகில் படம்

‘நெடுஞ்சாலை’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான ஆரி, ‘பகவான்’ என்ற புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நெடுஞ்சாலை படத்தில் கதாநாயகனாக அறிமுகமான ஆரி, பகவான் என்ற புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடி, பூஜிதா பொன்னாடா. சிறப்பு தோற்றத்தில், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பாரட் வில்லனாக நடிக்கிறார். சம்பத்ராம், அபிஷேக் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

காளிங்கன் டைரக்டு செய்கிறார். சி.வி.மஞ்சுநாதா தயாரிக்கிறார். ஆரி, பூஜிதா நடித்த பாடல் காட்சி சமீபத்தில் படமானது. இந்த பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் கலா நடனம் அமைத்தார்.

இது ஒரு திகில் படம். மித்தலாஜிகல் த்ரில்லர் (புராண திகில் படம்) என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT