சினிமா செய்திகள்

பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் உருவாகும் படத்தின் முக்கிய அறிவிப்பு

இந்த படம் அடுத்த ஆண்டு 2027 ஜூன் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் கடைசியாக 'தேவரா' படத்தில் நடித்திருந்தார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படத்தை தொடர்ந்து, ஜூனியர் என்.டி.ஆர், ‘கே.ஜி.எப்’ புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

அவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார். டிராகன் என இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்தப் படத்திற்காக ஜூனியர் என்டிஆர் வெறும் 20 நாட்களில் சிக்ஸ்-பேக் உருவாக்கியிருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு 2027 ஜூன் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இன்று இரவு 11.52 மணியளவில் இந்த படத்தின் பர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ படத்தின் டைட்டிலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.