அஜித் குமார் ரேசிங் அணி, இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் (Silverstone) பந்தயக் களத்தில் நடைபெற உள்ள 2026 மிச்செலின் லு மான்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.
நடிகர் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்தை அடுத்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘டேர்டெவில்’ படத்தில் நடிக்கிறார். அவருடைய சர்வதேச கார் ரேஸ் பயணத்தையும், அதில் அவர் எதிர்கொண்ட சவால்களையும் மையப்படுத்தி உருவாகியுள்ள ‘கிளாடியேட்டர்ஸ்’ என்ற ஒரு மணி நேர ஆவணத் திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே கார் ரேஸிங்கில் அதிக ஈடுபாடு கொண்ட அஜித்குமார், தனது பெயரில் சொந்தமாக ரேஸிங் அணி ஒன்றை உருவாக்கி சர்வதேச தொடர்களில் பங்கேற்று வருகிறார்.
கடந்த வாரம் ஐரோப்பாவில் நடைபெற்று வரும் மிச்சலின் லீ மேன்ஸ் கோப்பைக்கான போட்டியில் பங்கேற்று இருந்தார். இந்த நிலையில், அஜித் குமார் ரேசிங் அணி, இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் (Silverstone) பந்தயக் களத்தில் நடைபெற உள்ள 2026 மிச்செலின் லு மான்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. அஜித்குமாரின் ரேசிங் அணி இந்த பந்தயத்தில் முத்திரை பதிக்குமா? என்ற எதிர்பார்ப்பு அஜித்குமார் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வாரம் ஐரோப்பாவில் நடைபெற்ற போட்டியில், அஜித்தின் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. அஜித் காயமின்றி தப்பினார். அஜித் கார் பந்தயங்களில் விபத்தைச் சந்திப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் விபத்துகளை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.