இந்தியத் திரையுலகில் இதுவரை அதிக வசூல் ஈட்டிய திரைப்படங்களின் பட்டியலில் ‘ராமாயணா’ திரைப்படம் டாப் 5 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது. வெளியான 13 நாட்களிலேயே ரூ.1,483 கோடி வசூல் ஈட்டி இந்தச் சாதனையைப் படைத்துள்ளது.
இந்தியத் திரைப்படங்களின் உலகளாவிய வசூல் பட்டியலில் அமீர்கான் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘தங்கல்’ திரைப்படம் ரூ.2,070 கோடி வசூலுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, 2026-ம் ஆண்டு வெளியான ‘துரந்தர் 2’ திரைப்படம் ரூ.1,820 கோடி வசூலுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
பிரபாஸ் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான ‘பாகுபலி 2’ திரைப்படம் ரூ.1,810 கோடி வசூலுடன் மூன்றாவது இடத்திலும், அல்லு அர்ஜுன் நடிப்பில் 2024-ம் ஆண்டு வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் ரூ.1,800 கோடி வசூலுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.
இந்த நிலையில், 2026-ம் ஆண்டு வெளியான ‘ராமாயணா பார்ட் 1’ திரைப்படம் ரூ.1,483 கோடி வசூல் ஈட்டி, இந்தியத் திரைப்படங்களின் அதிக வசூல் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக, வெளியான 13 நாட்களிலேயே இந்த வசூலை எட்டியிருப்பது திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.
‘ராமாயணா பார்ட் 1’ திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால், அதன் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், அடுத்தடுத்த நாட்களில் இந்தப் படம் வசூல் பட்டியலில் மேலும் முன்னேற்றம் காணுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.