சினிமா செய்திகள்

தனுஷ் நடித்த 'ஓம்' படத்திலிருந்து புதிய பாடல் வெளியானது

தனுஷ், ஸ்ரீலீலா, சாய் பல்லவி நடிக்கும் ‘ஓம்’ திரைப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் அடுத்த பாடலான 'ஃபா ஃபா ஃபா' என்ற பாடல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ளது. சாய் அபயங்கர், தமிழ் ஆதவன் இணைந்து பாடியுள்ள இப்பாடலை தமிழ் ஆதவன் எழுதியுள்ளார்.

தனுஷ் நடிக்கும் ‘ஓம்’

‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படம் ‘ஓம்’. தனுஷின் 55-வது படமாக உருவாகும் இதனை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்திலும், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழில் நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நவம்பர் 20-ம் தேதி வெளியீடு

‘ஓம்’ திரைப்படம் முதலில் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு, நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. இந்த படத்தினை தியேட்டரில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஓம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டது. அதனை தொடர்ந்து நடிகை சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோரின் கதாபாத்திர கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

புதிய பாடல்

இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். முன்னதாக இவரது இசையில் வெளியான 'அலாக்கா லோவா', 'வீழா வீரா', 'செஞ்சுடரே' போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் அடுத்த பாடலான 'ஃபா ஃபா ஃபா' என்ற பாடல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ளது. சாய் அபயங்கர், தமிழ் ஆதவன் இணைந்து பாடியுள்ள இப்பாடலை தமிழ் ஆதவன் எழுதியுள்ளார்.

SCROLL FOR NEXT