சென்னை,
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தயாரிப்பாளர் ராஜன் பேசினார். அப்போது விஜய்யை மறைமுகமாக விமர்சித்து பேசினார். தயாரிப்பாளர் ராஜன் பேசியதாவது:
முதலீடு திரும்ப வந்தாலே தயாரிப்பாளர்கள் திரும்பி படம் எடுப்பார்கள். தயாரிப்பாளருக்கு உள்ள வியாதி என்ன தெரியுமா? ஒரு படம் எடுத்துவிட்டால் அதோடு விட மாட்டோம். போட்ட முதலீடு வந்தாலே போதும். லாபம் வர வேண்டும் என்று கூட அவசியம் இல்லை. தொழிலாளர்கள் நல்லா இருந்தால் போதும். முதலாளி நல்லா இருந்தால் சினிமா நன்றாக இருக்கும். இப்போது அரசு யார் என்று தெரியவில்லை. யாரை கேட்டாலும் அவருக்குதான் ஓட்டு போட்டேன் என்கிறார்கள். யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறார்கள். கொடு கொடு என்கிறார்கள். ஒருத்தர் சொல்றாரு யாரு கொடுத்தாலும் வாங்கிக்கோங்க..ஆனால் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று.. ஏழை ஒன்னுமே இல்லாதாவரு.. ஒன்னுமே இல்லை..அதனால் அவர் கொடுக்க மாட்டாரு... ஒன்னு தெளிவாக இருக்கனும்..வாங்காத யார்கிட்டையும் என்று சொல்ல வேண்டும். நான்கொடுக்க மாட்டேன். நல்லது..யாரிடமும் வாங்காதீங்க என்று சொல்ல வேண்டும். யார் கொடுத்தாலும் வாங்கிக்கோங்க ஆனால் ஓட்டு போடுங்க என்றால்.. தப்பாச்சே.. நான் பொதுவாக சொல்கிறேன். யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. நம்ம சினிமா உலகை சார்ந்தவர்கள் வந்தால் நல்லது மகிழ்ச்சி..ஆனால் நல்லது பண்ண வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.