சினிமா செய்திகள்

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய பிரபல நடிகர்: கேரளாவில் பரபரப்பு

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் மணியன்பிள்ளை ராஜு. 70 வயதான இவர் மலையாள திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மணியன்பிள்ளை ராஜு சில திரைப்படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். இவர் நேற்று இரவு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் கிளப் ஒன்றில் இருந்து தனது காரில் வெளியே வந்தார். அப்போது எதிரே அந்த ஒரு பைக் மீது மனியண்பிள்ளை கார் மோதியது. இந்த விபத்தில் பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் காயம் அடைந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய நடிகர் மணிபிள்ளை சம்பவ இடத்தில் நிற்காமல் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே இன்று காலை காவல் நிலையத்தில் சரண் அடைந்த நடிகர் மணிபிள்ளை, விபத்து நடைபெற்றதும் அச்சத்தில் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறினார். தனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த நேரத்தில் தன்னால் உதவ முடியவில்லை எனவும் மணிப்பிள்ளை தெரிவித்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.