சினிமா செய்திகள்

யாஷின் 'டாக்ஸிக்' படத்தில் இணைந்த பிரபல நடிகை.. பர்ஸ்ட் லுக் வெளியீடு

‘டாக்ஸிக்’ படம் அடுத்தாண்டு மார்ச் 19-ம் தேதி வெளியாகிறது.

சென்னை,

நடிகர் யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்கு டாக்ஸிக் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல நடிகை கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.

இதில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா, ருக்மிணி வசந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்தாண்டு மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இப்படத்திலிருந்து, நயன்தாரா, கியாரா அத்வானி மற்றும் ஹுமா குரேஷியின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. இந்நிலையில், பிரபலமான நடிகையும், பாடகியுமான தாரா சுதாரியாவின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இதில் நடிகை தாரா சுதாரியா 'ரெபேக்கா' என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் கவனத்தை ஈர்த்து வருகிறது.