சினிமா செய்திகள்

வெளியீட்டுக்கு முன்பே வசூல் வேட்டை... ரூ.100 கோடியை குறிவைக்கும் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே'

உலகளவில் வருகிற டிசம்பர் 18 ஆம் தேதியில் படம் வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் ஒருநாள் முன்கூட்டியே டிசம்பர் 17-ல் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தின் முன்பதிவு இந்தியாவில் நவம்பர் 16-ம் தேதி தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய முதல் 36 மணி நேரத்திலேயே ரூ.15 கோடிக்கும் அதிகமான தொகையை ஈட்டியுள்ளது. படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் ரூ.75 கோடியைத் தாண்டும் என வர்த்தக வட்டாரங்கள் கணித்துள்ளன

ரூசோ பிரதர்ஸ் மீண்டும் இணைவு

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள மார்வெல் சூப்பர் ஹீரோ திரைப்பட வரிசையில் அடுத்ததாக வெளியாகவுள்ள 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

'அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்' மற்றும் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ், 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' படத்தையும் இயக்கியுள்ளனர். இந்தப் படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஷூரி, கிறிஸ் எவன்ஸ், ஜேம்ஸ் மார்ஸ்டன், வனேசா கிர்பி, ரெபேக்கா ரோமிஜின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘டாக்டர் டூம்’

மார்வெல் காமிக்ஸ் கதைகளின் சூப்பர் வில்லனான 'டாக்டர் டூம்' கதாபாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் மார்வெல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் இப்படத்தில் 'டாக்டர் டூம்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தியாவில் டிசம்பர் 17-ல் ரிலீஸ்

மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படம், வரும் டிசம்பர் 18-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான விளம்பர பணிகளை படக்குழு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' படத்தின் தமிழ் பதிப்பின் டீசரை படக்குழு வெளியிட்டது. உலகளவில் வருகிற டிசம்பர் 18 ஆம் தேதியில் படம் வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் ஒருநாள் முன்கூட்டியே டிசம்பர் 17-ல் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

டிக்கெட்டி முன்பதிவில் வசூல் வேட்டை

இப்படத்தின் முன்பதிவு இந்தியாவில் நவம்பர் 16-ம் தேதி தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய முதல் 36 மணி நேரத்திலேயே ரூ.15 கோடிக்கும் அதிகமான தொகையை ஈட்டியுள்ளது. படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் ரூ.75 கோடியைத் தாண்டும் என வர்த்தக வட்டாரங்கள் கணித்துள்ளன. ரசிகர்களின் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்தால், தொடக்க நாளில் ரூ.100 கோடி வசூலை எட்டவும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இவை தற்போதைய முன்பதிவு நிலவரத்தின் அடிப்படையிலான கணிப்புகள் மட்டுமே என்று கூறப்படுகிறது. வெளியீட்டுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், முன்பதிவிலேயே இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பது ஹாலிவுட் திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.

SCROLL FOR NEXT