சினிமா செய்திகள்

"ஓஹோ எந்தன் பேபி" புரமோஷன் வீடியோ வெளியிட்ட ருத்ரா

நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள ‘ஓஹோ எந்தன் பேபி’ படம் வருகிற 11ம் தேதி வெளியாகிறது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் விஷ்ணு விஷால். இவருடைய தம்பி ருத்ரா 'ஓஹோ எந்தன் பேபி' என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தினை விளம்பரப் பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இதில் பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் டி-கம்பெனி இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் நடிகர்களான மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, விஷ்ணு விஷால் இடம் பெற்றுள்ளனர். இப்படத்தின் ஓ.டி.டி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. படத்தின் டிரெய்லர் காட்சிகள் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்து வருகிறது. 'ஓஹோ எந்தன் பேபி' திரைப்படம் வருகிற 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், 5 நாள்களே மீதமுள்ள நிலையில் 5 விதமான பாணியில் அதைக் கூறி ருத்ரா புரமோஷன் செய்துள்ளார். ருத்ராவுக்கு அருகில் விஷ்ணு விஷால் உட்கார்ந்து, "பரவாயில்லை என்னைவிட நல்லாவே நடிக்கிற" எனக் கூறும் புரமோஷன் வீடியோ வைரலாகி வருகிறது.

View this post on Instagram

SCROLL FOR NEXT