சென்னை,
‘ஆதர்ஷ குடும்பம்’ படத்திலிருந்து புதிய வீடியோ வெளியாகி இருக்கிறது.
வெங்கடேஷ்- திரிவிக்ரம் ஊட்டணியின் உருவாகி வரும் படம் ‘ஆதர்ஷ குடும்பம்’. இத்திரைப்படத்தில், வெங்கடேஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். நிவேதா பெத்துராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார்.
இப்படத்தில் வெங்கடேஷ் 'சிட்டிபாபு' என்ற கதாபாத்திரத்திலும், ஸ்ரீநிதி ஷெட்டி 'ஸ்வர்ணா' என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். சமீபத்தில் இவர்களது கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், யுவினா பார்த்தவியின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகி உள்ளது. இதில் அவர் சிட்டிபாபு - ஸ்வர்ணா தம்பதியின் மகளான 'சம்பூர்ணா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதில், இவர் கூறும் ’அப்பா நான் ஒரு பையன காதலிக்கிறேன்’ என்று வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.